ரி-ரிலீஸிலும் மாஸ் கலெக்ஷன் செய்யும் அஜித்தின் மங்காத்தா... இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா?
மங்காத்தா
அஜித்தின் 50வது படமாக வெளியானது தான் மங்காத்தா. இதுபோன்ற 25, 50, 75வது படங்களில் எல்லாம் பிரபலங்கள் மிகவும் பாசிட்டீவ் கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள், அப்படிதான் கதைகள் தேர்வு செய்வார்கள்.
ஆனால் அஜித் தனது 50வது படத்தில் மாஸ் வில்லனாக நடித்து அதில் பெரிய வெற்றிக் கண்டார். படத்தின் கதை, அஜித்திடம் ரசிகர்கள் ரசிக்கும் பைக் காட்சிகள், மாஸ் லுக் என படத்தில் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் இருந்தது.

இப்படம் ரிலீஸின் போதே பெரிய அளவில் கொண்டாடப்பட்டது, கதையை தாண்டி யுவனின் இசை சொல்லவே வேண்டாம்.
ரீ-ரிலீஸ்
கடந்த ஜனவரி 23ம் தேதி அஜித்தின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது. அஜித் படம் என்றாலே எப்போதும் முந்தியடித்துக்கொண்டு ரசிகர்கள் டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள், அதிலும் மங்காத்தா அவரது 50வது படம் சொல்லவே வேண்டாம்.
செம டிக்கெட் புக்கிங் நடந்தது, ரசிகர்களும் படத்தை இப்போது கொண்டாடி வருகிறார்கள்.
படம் வெளியாகி 9 நாள் முடிவில் இதுவரை ரூ. 21 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.