ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
மங்காத்தா
புதிய படங்களை தாண்டி இப்போதெல்லாம் ரீ-ரிலீஸ் ஆகும் படங்களை காண தான் ரசிகர்கள் அதிகம் கூடுகிறார்கள் என்றே கூறலாம்.
அப்படி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் என பலரின் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளது. அப்படி சமீபத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் மங்காத்தா.

அஜித்தின் 50வது படம் என்று வெளியான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். தனது 50வது படத்தில் எத்தனை நாள் தான் நானும் நல்லவனாக நடிப்பது என வில்லனாக நடித்து கெத்து காட்டினார்.
மங்காத்தா படத்தின் 2ம் பாகம் எப்போது எப்போது என ரசிகர்கள் கேட்கும் நேரத்தில் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த வாரம் வெளியான இப்படத்தை படக்குழு மொத்த ரசிகர்கள் கூட்டத்துடன் இணைந்து பார்த்தார்கள். அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
மங்காத்தா ரீ-ரிலீஸிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை தரமாக செய்து வருகிறது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 14 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.