வலிமை ட்ரைலர் கொண்டாட்டம் ! அஜித் சொன்ன மாஸ் டயலாக்ஸ்..
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதனிடையே இன்று 6.30 மணிக்கு யூடியூப்பில் வலிமை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் ட்ரைலருக்கு வியூஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
மேலும் ட்ரைலர் வேற லெவலில் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதில் நடிகர் அஜித் சொன்ன வசனங்கள் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது.
அப்படி அவர் சொன்ன மாஸ் டயலாக்ஸ் :
1. ஏழையாக இருந்து உழைத்து சாப்பிடுற எல்லாரையும் கேவலப்படுத்தாத..
2. உயிரெடுக்குற உரிமை நமக்கு இல்லை Sir..
3. வலிமைன்றது அடுத்தவனை காப்பாத்த தான் அழிக்க இல்ல..
4. தான் உண்டு தான் வேல உண்டு-னு இருக்கிறவனோட சமநிலை தவறனா, அவனோட கோவம் எப்படி இருக்கும்-னு காட்டுவேன்..