நடிகர் அஜித் வென்ற தங்க பதக்கங்கள் ! வெளியான மாஸ் புகைப்படம், இதோ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம், பல நாட்கள் காத்திருப்பிற்கு பின் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
இதனிடையே தற்போது Omicron வைரஸ் தமிழ்நாட்டிலும் பரவி வருவதால், மூன்றாவது அலை தொடங்கிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது.
இதனால் வலிமை திரைப்படம் மீண்டும் தள்ளிப்போய்விடுமோ என்ற பயம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. எனவே படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் எப்போதும் அவர் சம்மந்தப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்றுள்ள பதகங்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
