நான் கொலைகாரனா.. கொள்ளைக்காரனா.. ஏன் தேடுறீங்க? ரசிகர்களிடம் ஜாலியாக பேசிய அஜித்! வீடியோ வைரல்
அஜித்
நடிகர் அஜித் தற்போது பைக் ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் லடாக்கில் இமயமலையின் பல முக்கிய இடங்களில் சென்று இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
அஜித் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் அஜித் இருந்த ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது.
ரசிகரிடம் பேசிய அஜித்
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சிலரிடம் பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. பைக் ட்ரிப் வந்திருக்கும் ரசிகர்கள் சிலர் அவரை பார்த்து பேசி இருக்கின்றனர்.
உங்களை மூன்று நாட்களாக தேடிக்கொண்டிருந்தோம் என ரசிகர் சொல்ல, 'தேடிட்டு இருந்தீங்களா.. நான் என்ன கொலைகாரனா இல்ல கொள்ளைக்காரனா?' என அஜித் கேட்கிறார்.
'இல்லை சார்.. உங்களை பார்ப்பதற்காக' என ரசிகர்களும் கூற, அதன் பின் அவர்கள் விவரங்களை கேட்டு அஜித் அவர்களிடம் உரையாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
இதோ
#Ajith sir ❤️?#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
— Ajith Network (@AjithNetwork) September 16, 2022