அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த விஜய்! கெரியரையே மாற்றிய படம்
நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையே தான் சினிமாவில் போட்டி இருந்து வருகிறது. அவர்களது ரசிகர்களுக்கு இடையேயும் சமூக வலைத்தளங்களில் இதற்காகவே மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.
விஜய் vs அஜித்
விஜய் மற்றும் அஜித் இருவருமே ஆரம்பகட்டத்தில் இருந்து தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தான் தற்போது அவர்கள் இருக்கும் உயரத்திற்கு காரணம்.
அவர்கள் கெரியரில் வெற்றி தோல்வி என இரண்டையுமே சந்தித்து இருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் விஜய் நடித்து பெரிய ஹிட் கொடுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக செம ஸ்டைலாக காட்டிய படம் அது.
அஜித்துக்காக எழுதப்பட்ட 'திருமலை'
திருமலை படத்தை இயக்கிய ரமணா அளித்திருக்கும் பேட்டியில் அந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டது என சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
அஜித்திடம் அந்த கதையை சொல்லவே முடியாமல் போன சூழ்நிலையில் அதற்க்கு பின் விஜய்யை வைத்து திருமலை படம் எடுத்து இருக்கிறார்.
அதற்கு பிறகு அஜித்தை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது 'இது உங்களுக்காக எழுதப்பட்ட கதை' என இயக்குனர் ரமணா கூறினாராம்.
சர்ச்சையில் சிக்கிய ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.. பாடகி ராஜலக்ஷ்மியின் அதிரடி முடிவு

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
