பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 4 படங்களை நிராகரித்த முன்னணி நடிகர், யார் தெரியுமா
ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பேரெடுத்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
கமல் ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து RC 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி மற்றும் எந்திரன். இந்த படங்களை தவிர்த்தும் பல ஹிட் படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார்.
நிராகரித்த நடிகர்
ஆனால், இந்த 4 படங்களில் மட்டும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், இந்த 4 படத்திலும் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம்.

ஆம், அஜித்திற்காக தான் இந்த 4 படங்களின் கதையும் உருவானதாம். ஆனால், அஜித் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு காரணங்களை கூறி ஷங்கரிடம் இருந்து தனக்கு கிடைத்த 4 படங்களின் வாய்ப்பையும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட்டே விலக நினைத்த கீரவாணி! இப்போது ஆஸ்கார் வாங்கி சாதனை
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri