அஜித் நடித்திருக்க வேண்டிய முன்று பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் ! தட்டி தூக்கிய நடிகர் சூர்யா
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எப்போதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது திரைபயணத்தில் ஏகபட்ட முக்கிய திரைப்படங்களை மிஸ் செய்துள்ளார். அப்படி அஜித் தவறவிட்டு பின் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஒரு சில பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
நேருக்கு நேர்
விஜய் - சூர்யா நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில், முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். பின் அவர் விலக அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு போனது.
நந்தா
நடிகர் சூர்யாவின் திரைபயணத்தைய மாற்றிய திரைப்படம் நந்தா, இப்படத்தின் கதை முதலில் நடிகர் அஜித்திடம் தான் இயக்குநர் பாலா கூறியிருந்தார். ஆனால் முழு கதை சொல்லாத காரணத்தினால் அஜித் இப்படத்தை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஜினி
சூர்யா - முருகதாஸ் கூட்டணியில் வெளியான கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. சூர்யாவிற்கு தெலுங்கு மாநிலங்களில் பெரிய மார்கெட் உருவாக காரணமாகவும் கஜினி திரைப்படம் அமைந்தது. அப்படியான இந்த கஜினி திரைப்படம் முதலில் அஜித் நடிப்பில் மிரட்டல் என உருவாகவிருந்து பின் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
சூர்யா ஸ்டார் இமேஜை ஒதுக்கிவைத்துவிட்டு இதை செய்தார்: பாராட்டிய விஜய் சேதுபதி

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
