சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. எந்த படம் தெரியுமா
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்கவிருந்தது.
ஆனால், சில காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்த நேரத்தில் தற்போது வருகிற ஆஸ்கர் இரண்டாம் வாரத்தில் இருந்து துவங்கும் என தெரியவந்துள்ளது. அதுவும் வெளிநாட்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறதாம்.
அஜித் தவறவிட்ட படம்
நடிகர் அஜித் எத்தனையோ சூப்பர்ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், தனது திரை வாழ்க்கையில் சில சூப்பர்ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் ரன்.
லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் தானாம்.
ஆனால், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த கதை மாதவனிடம் சென்றுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
வசூலில் சக்கை போடு போடும் சந்தானத்தின் DD Returns- மொத்த வசூல் விவரம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
