விஜய் நடித்து சூப்பர்ஹிட்டான படத்தை தவறவிட்ட தல அஜித்.. என்ன படம் தெரியுமா
தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்களுடைய படங்கள் என்றால், அது அவர்களுடைய ரசிகர்களுக்கு திருவிழா தான்.
அந்த அளவிற்கு கொண்டாட்டங்கள் இருக்கும். இந்நிலையில் தளபதி விஜய் நடித்து வெளியாகி இதுவரை பல படங்கள் சூப்பர்ஹிட்டாகி இருக்கிறது.
அதில் ஒன்று தான் லவ் டுடே. கடந்த 1997ஆம் வெளியான இப்படம் மக்கள் ஆதரவினால் மாபெரும் வெற்றிபெற்றது.
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிவக்கவிருந்தது தளபதி விஜய் கிடையாதாம்.
ஆம், தல அஜித் தான், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து அவர் வெளியேற, அதன்பின் இப்படத்தில் விஜய் நடித்தார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.