விஜய்யிடம் கதை கூறியுள்ள அஜித் பட சென்சேஷன் இயக்குனர்.. ஓகே சொல்லுவாரா தளபதி
நடிகர் விஜய்
விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்திருந்தாலும், இதுவரை படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.
வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

தளபதி 67 படத்திற்குப்பின் பிரதீப் ரங்கநாதனுடன் விஜய் இணைகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. நடிகர் விஜய்க்கு திரைத்துறையை சார்ந்த பல முக்கிய இயக்குனர்கள் கதை கூறி வருகிறார்கள்.
அடுத்த கூட்டனி
அந்த வரிசையில் எச். வினோத் கூட விஜய்க்கு கதை கூறியுள்ளாராம். இதனால், லோகேஷ் கனகராஜ் படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம். எச். வினோத் இயக்கத்தில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri