அஜித் படத்தில் நிராகரித்த விஷயம்.. ரஜினியின் பாட்ஷாவில் பயன்படுத்தப்பட்டு சூப்பர்ஹிட் ஆனது, என்ன தெரியுமா
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா தயாரிக்க திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என தெரியவந்துள்ளது.
ஆசை
அஜித்தின் திரை பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ஆசை. வசந்த் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சுபலக்ஷ்மி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தில் தன்னுடைய இசையில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த தேவா. ஆனால், இப்படத்திற்காக போடப்பட்டு இயக்குனரால் ரிஜெக்ட் செய்யப்பட்ட ஒரு சூப்பர்ஹிட் பாடலும் இருக்கிறது.
பாட்ஷாவில் பயன்படுத்திய தேவா
அந்த பாடலை தன்னுடைய இசையில் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா படத்திற்கு தேவா பயன்படுத்தியுள்ளார். அது எந்த பாடல் தெரியுமா, 'ஸ்டைலு ஸ்டைலு தான்'.
ஆம், இந்த பாடல் முதன் முதலில் அஜித்தின் ஆசை படத்திற்காக போடப்பட்டது தானாம். ஆனால், இயக்குனருக்கு அந்த பாடல் பெரிதும் இம்பர்ஸ் செய்த காரணத்தினால், அந்த பாடலை ரிஜெக்ட் செய்துவிட்டாராம்
. அந்த பாடலுக்கு பதிலாக தேவா இசையில் ஆசை படத்தில் இடம்பெற்ற பாடல் தான், 'மீனம்மா அதி காலையிலும்'. இந்த பாடலும் மாபெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாகலமாக நடந்த கவின், மோனிகா திருமணம்.. அழகிய ஜோடியின் புகைப்படம்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
