வைரலாகும் விடாமுயற்சி தள படப்பிடிப்பு புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்
அஜித்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித். துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து அதிக அப்டேட் வரவில்லை என ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் டீஸர் கடந்த 28 - ம் தேதி வெளிவந்தது. இந்த டீஸரை பார்த்து அஜித் ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர்.
இப்படம் தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து தற்போது தொடர்ந்து அப்டேட் வெளிவர தொடங்கியுள்ளது.
மாஸ் ட்ரீட்
அந்த வகையில், சமீபத்தில் கூட அஜித்குமார் டப்பிங் பணியில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து கவனத்தை பெற்றது.
இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், அஜித் மாஸான தோற்றத்தில் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
