ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை தொடர்ந்து அஜித் இணையப்போகும் இயக்குனர் யார்... மலையாள சினிமா இயக்குனரா?
நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம்.
இந்த வருடம் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியானது. இதில் விடாமுயற்சி ஓரளவிற்கு வெற்றிக் கண்டது என்றாலும் குட் பேட் அக்லி மிகப்பெரிய ரீச் பெற்றது.
ஓடிடியிலும் வெளியாகி இருந்த இப்படம் இளையராஜாவின் போட்ட வழக்கால் இப்போது எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் படம் இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது.
அடுத்த படம்
குட் பேட் அக்லி மூலம் பெரிய வெற்றிக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்த படத்திற்காக மலையாள இயக்குனரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மார்கோ பட இயக்குனர் ஹனீப் அதேனியுடன் அஜித் அடுத்து கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.