குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா
அஜித் சம்பளம்
இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் அஜித் நடிப்பில் வெளிவந்தது. இதில் விடாமுயற்சி திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து வெளிவந்த குட் பேட் அக்லி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்கின்றனர். இப்படமும் உலகளவில் ரூ. 228 கோடி வசூல் செய்து லாபத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
அடுத்த படத்திற்கான சம்பளம்
இந்த நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகின்றனர்.
இப்படி இருக்க இப்படத்திற்காக ரூ. 175 கோடி சம்பளம் அஜித் வாங்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.