கொண்டாட்டம் என்ற பெயரில், அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.. அஜித் பரபரப்பு பேச்சு!
அஜித்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு இரு திரைப்படங்கள் வெளியானது.
இதில், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி வெளிவந்த நிலையில், விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் ஆக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்திருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
பரபரப்பு பேச்சு!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அஜித் குமார் பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " புது படங்கள் வெளியானால் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்கம் உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, ஒன்ஸ் மோர் கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். அதனால் இவற்றை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
