அஜித் போனில் சொன்ன விஷயம்.. எனக்கு தூக்கமே வரவில்லை: ஜீ.வி.பிரகாஷ்
நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று Immortal என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. அதில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.. இருப்பினும் ஜீ.வி விடாமுயற்சியுடன் ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகிறார்.
இன்று தஞ்சாவூரில் ஒரு தியேட்டரில் மக்களுடன் அவர் படம் பார்த்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அஜித் போன் கால்
இந்நிலையில் அஜித் செய்த போன் கால் பற்றி பேசிய ஜீ.வி.பிரகாஷ், "அவரது documentary படம் அவர்க்கு ரொம்ப பர்சனல். அவரது வாழ்க்கையை வைத்து எடுத்து இருக்கிறார்கள். அதன் ட்ரெய்லர் மற்றும் முழு படத்திற்கும் போட்ட இசை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது."
"இரவில் திடீரென போன் செய்து என்னிடம் பேசி நன்றி கூறினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது."
"நன்றாக இருந்தது. அது உங்களை நிச்சயம் proud ஆக்கும். படத்தை சர்வதேச அளவில் கொண்டு போக போகிறேன் என கூறினார்."
"அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை" என ஜீ.வி பிரகாஷ் கூறி இருக்கிறார்.
