நடிகர் அஜித் உடன் ரேஸ் காரில் பயணிக்கலாம்.. கட்டணம் எவ்வளவு பாருங்க!
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக பல கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அஜித் பிரபல கோலா நிறுவனத்தை விளம்பரப்படுத்த தொடங்கி இருக்கிறார். அஜித்தின் கார், டிசர்ட் உள்ளிட்டவற்றில் அந்த நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
மேலும் அந்த கூல்டிரிங்க்ஸ் நிறுவன விளம்பரத்திலும் அஜித் போட்டோ இடம்பெற தொடங்கி இருக்கிறது. தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் இருக்கும் அஜித், இப்படி விளம்பரத்தில் நடிக்க தொடங்கி இருப்பதை நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

அஜித் உடன் காரில் பயணிக்க கட்டணம்
இந்நிலையில் தற்போது அஜித் துபாயில் இருக்கும் நிலையில் அவரது Ferrari 488 Challenge ரேஸ் காரில் உடன் பயணிக்க வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் 3500 திர்ஹாம் செலுத்தி அதற்கான டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு நபருக்கு 86 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும்.