துப்பாக்கி சூடு போட்டிக்காக திருச்சி வந்த அஜித்.. வேற லெவல் மாஸ் லுக்கில் வெளிவந்த வீடியோ
நடிகர் அஜித்
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய ஏகே62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய ஹாபிஸையும் மற்றொரு பக்கம் செய்து வருகிறார் அஜித்.
துப்பாக்கி சூடு போட்டியில் அஜித்
ஆம், சமீபத்தில் வெளிநாட்டில் பைக் ரைட் சென்றிருந்தார். அங்கிருந்து அஜித் எடுத்துகொண்ட பல புகைப்படங்கள் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்யுள்ளார் அஜித். ஆம், தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அஜித் எற்கனவே தமிழ்நாடு அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AK #AjithKumar Video 🤩🤩🤩 #AK61 pic.twitter.com/bn63w1kXrE
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) July 27, 2022
Thala at Trichy...
— AK Siva (@itzthalasiva) July 27, 2022
😍🔥🔥#Ak61 #Ajithkumar pic.twitter.com/NDhWrQkCpQ
பயில்வான் ரங்கநாதன் அடுத்தடுத்த கேட்ட கேள்வி- கோபமாக துல்கர் சல்மான்