விஜய்யின் இடத்தை பிடிக்கும் அஜித்.. தலைகீழாக மாறிய நிலைமை, ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் - அஜித்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகர்களாக வலம் வருகிறார்கள்.
இதில் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போல் நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.
தலைகீழாக மாறிய நிலைமை
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், தளபதி 68 திரைபடத்திற்க்கு பிறகு, வேறு எந்த திரைப்படத்திலும் இரண்டு வருடங்ளுக்கு நடிக்காமல் அரசியலுக்குள் வரப்போகிறார் என கூறப்படுகிறது.
இதனால் அந்த இடத்தை உறுதியாக நடிகர் அஜித் குமார் பிடித்துவிடுவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது நடக்கிறதா என்று.