விஜய் நடிக்கவிருந்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்- செம மாஸ் படம் மிஸ் ஆகிருச்சே
விஜய்-அஜித்
தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்கள் படங்கள் வெளியாகிறது என்றாலே திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.
இப்போது விஜய் தனது 68வது படமான கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதாக வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பிடிக்காத உறவு, அதை செய்து தான் ஆக வேண்டும்- விவாகரத்து பற்றி பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா
இன்னொரு பக்கம் அஜித் தனது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஆபரேஷன் செய்துகொண்ட ஓய்வில் இருப்பார் என்று பார்த்தால் மீண்டும் தனது பைக் டூரை தொடங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
மிஸ் ஆன படம்
ஒரு சூப்பர் ஹிட் படத்தை படப்பிடிப்பு வரை சென்று பிறகு விஜய் மிஸ் செய்த படம் குறித்து தான் ஒரு செய்தி உலா வருகிறது.
சரண் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆன அட்டகாசம் படத்தை தான் விஜய் மிஸ் செய்துள்ளார். ஆம், அட்டகாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தான், இதை இயக்குனர் சரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.