ப்ளூ சட்டை முகத்தில் கரியை பூசிய அஜித்
அஜித்தின் வலிமை படம் கடந்த வாரம் வெளியாகி தமிழ்நாட்டு தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. படத்தை பற்றி அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதை தான் வசூல் ஈட்டி வருகிறது இந்த படம்.
ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை தனது விமர்சனத்தில் மிக மோசமாக பேசி இருந்தார். மேலும் அஜித் தோற்றத்தை விமர்சித்தும் ட்விட் செய்து இருந்தார்.
அஜித் முகத்தில் தொப்பை விழுந்துவிட்டது, அவர் டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் அவர் விமர்சித்து இருந்தார். இது தரம்தாழ்ந்த விமர்சனம் என சினிமா துறையினர் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அஜித் மகன் பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. வெள்ளை தாடி, கடுக்கன் என வித்யாசமான லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்த போட்டோக்கள் மூலம் ட்ரோல்களுக்கு அஜித் பதிலடி கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ப்ளூ சட்டை முகத்தில் கரி பூசிவிட்டார் என்றும் சொல்லலாம்.

