ஹேட்டர்ஸுக்கு பதிலடியாக அஜித் பேசிய வசனம்: வலிமையில் இதை கவனித்தீர்களா
நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அதே அளவுக்கு அவருக்கு ஹேட்டர்ஸும் ஒரு பக்கம் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. இணையத்தில் அஜித்தை ட்ரோல் செய்பவர்களும், அஜித் ரசிகர்களும் தினம்தோறும் போடும் இணைய சண்டையை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் பேசும் சில வசனங்கள் அவரது ஹேட்டர்ஸுக்கு பதிலடியாக இருப்பது போல தான் இருக்கிறது.
"எனக்கு எதிரியா இருக்க முயற்சி பண்ணாத, அது ரொம்ப கஷ்டம்" என ஒரு இடத்தில் கூறுகிறார் அஜித்.
"கல் எறிஞ்சிட்டு தான் இருப்பாங்க. அதற்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அந்த கல்லை பிடித்து அதை வைத்து ஒரு கோட்டை கட்டி அதன் மீது அமர்ந்தால், நம் மீது கல் வீசியவர்கள் எல்லாம் நம்மை அண்ணாந்து பார்ப்பார்கள்" என அஜித் வலிமையில் பேசும் வசனமும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது.