ப்ளூ சட்டை மாறன் போன்றவர்களுக்கு அஜித் கூறிய பதில்! இப்படி சொல்லிட்டாரே..
அஜித்
அஜித் சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டது. பல ஏற்ற இரங்கங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் அவர். ரசிகர் மன்றங்களை அவர் களைத்துவிட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறும் சண்டையால் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகும்.
அதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் நடிகைகளை பற்றி தவறாக எழுதும் கிசுகிசுக்கள், நெகடிவ் விமர்சனங்கள், ட்ரோல்கள் என அதிகம் வருகின்றன.

அஜித் கமெண்ட்
அஜித் இதைப்பற்றி எல்லாம் சொன்ன கமெண்ட் என்ன என அவரது பைக் ட்ரிப்பில் உடன் சென்ற நபர் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
இப்படி செய்பவர்களை நிறுத்த சொல்வது மாமிசம் விற்கும் கடைக்காரரிடம் விலங்குகளை கொல்லாதீர்கள் என சொல்வது போன்றது தான். அவரிடம் கேட்டால் "அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள், பொருளுக்கு மார்க்கெட் இருக்கிறது, நான் செய்யவில்லை என்றாலும் இன்னொருவர் நிச்சயம் செய்யத்தான்போகிறார்" என பதில் சொல்வார்கள்.
"Yellow ஜர்னலிசம், ட்ரோல்கள், நெகடிவ் விமர்சனங்கள் போன்றவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். அதை வைத்து வருமானம் ஈட்டி அந்த நபரின் குடும்பத்தை நடத்த முடியும் என்றால், இன்னொருவரது வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்னையும் வரவில்லை என்றால்.. இதை ஏற்றுக்கொள்ளலாம்" என அஜித் தெரிவித்தாராம்.
#ak pic.twitter.com/jZNYGIqrdj
— uday Kumar (@udaybhandelkar) December 23, 2022
நடிகர் விஜயகுமாருக்கு என்ன ஆச்சு? உடல்நிலை பற்றி அருண் விஜய் விளக்கம்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri