விரைவில் சென்னை திரும்பும் நடிகர் அஜித் ! வந்தவுடன் அவர் செய்யவுள்ள முதல் விஷயம்..
சென்னை திரும்பும் அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி AK61 படத்திற்காக இணைந்துள்ளது, விறுவிறுப்பாக நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகர் அஜித் பிரேக் எடுத்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய நாடான லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள அஜித், அங்கு அவரின் புகைப்படங்கள் பைக் ரைட் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி வைரலானதை பார்த்து வந்தோம்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் லண்டன் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சென்னை வந்தவுடன் AK61 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் கலந்து கொள்ளாத AK61 படத்தின் ஷூட்டிங் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்..