வெளிநாட்டில் பைக் டூர் செல்ல அஜித் ஓட்டும் பைக் அனைத்தும் இவருடையது தானா?- யார் அவர் தெரியுமா?
அஜித்தின் வலிமை படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது, தற்போது இடைவேளை கிடைக்க அஜித் வெளிநாடுகளுக்கு பைக் சுற்றுலா சென்றுள்ளார்.
தற்போது UKவில் வலம் வந்துகொண்டிருக்கும் அஜித்தை அங்கு ரசிகர்கள் அனைவரும் அடையாளம் கண்டு அவருடன் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து வருகிறார்கள்.
அஜித் பைக் விவரம்
இப்படி பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல விதவிதமான பைக்கில் சென்றுகொண்டிருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் அஜித்தின் சொந்த பைக்குகளா இது என ஆச்சரியமாக பார்த்து வந்தனர்.
ஆனால் உண்மையில் அது அஜித்தின் பைக் இல்லையாம். அதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்யும் பைக்கை அவருக்கு கொடுத்து உதவுவது அங்கு பைக் வாடகை நிலையம் வைத்திருக்கும் Mark Coventry என்பவர் தான். வைத்திருக்கும் மிகப்பெரிய அளவில் பைக் வாடகை நிலையம் வைத்திருக்கிறாராம்.
அவரிடம் இருந்து தான் அஜித் பைக் சுற்றுலா செல்ல வாடகைக்கு பைக்குகளை வாங்குகிறாராம்.
பாரிஸில் ரசிகரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அஜித்- வெளியான வீடியோ

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
