அஜித் எப்போதும் கேட்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்: ஷாலினி வெளியிட்ட வீடியோ
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என கூறப்படுகிறது. அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது. பூனேவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் பேவரைட் பாடல்
அஜித்தின் மனைவி ஷாலினி தற்போது இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அதில் ஆக்ட்டிவாக உள்ளார். அவர் அவ்வப்போது அஜித் உடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஷாலினி தனது கணவருடன் ஐரோப்பியாவில் காரில் பயணம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "உயிரும் நீயே உறவும் நீயே" என்னும் பாடலை கேட்டுக் கொண்டு அஜித் கார் ஓட்டிச் செல்கிறார்.
அது அஜித்துக்கு பிடித்த பாடல் என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த பாடல் அஜித் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "பவித்ரா" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது
#ShaliniAjith mam Instagram Story ❤️ #Ajithkumar ? pic.twitter.com/4oARRgg0Iy
— Nelson Ji (@Nelson_Ji) June 28, 2023
அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுனாங்க..ஜீ தமிழ் சீரியல் நடிகை வேதனை