அஜித் ரசிகர்களுக்கு மே 1ம் தேதி காத்திருக்கும் பெரிய ட்ரீட்! என்ன தெரியுமா
மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் 52vathu பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
வலிமை
பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைக்கு வந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிசில் அது 235 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருந்தது.
ஹெச் வினோத் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் உடன் அடுத்த படத்தில் கூட்டணி சேர்ந்து இருக்கிறார் அவர்.
இதன் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
ரசிகர்களுக்கு ட்ரீட்
இந்நிலையில் தற்போது மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வலிமை படம் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மார்ச் மாத இறுதியில் வலிமை ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டிவியில் ஒளிபரப்பாவதால் டிஆர்பியில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
May day.. may day...? May மாசம் வெயில் ஓட சேந்து நாங்களும் தெறிக்க விடுறோம்...?
— Zee Tamil (@ZeeTamil) April 18, 2022
வலிமை | May 1#Zeetamil #Valimai #AjithKumarBirthdaySpecial #WorldTelevisionPremiere #Zeetamilpromo #promo #AjithKumar @humasqureshi @BoneyKapoor @ActorKartikeya pic.twitter.com/0Hv8Olnju2