என் ரசிகர்களுக்கு அது தெரியும்.. அஜித் மிகவும் நம்பிக்கையாக சொன்ன விஷயம்
அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. அதில் அஜித் அசர்பைஜான் நாட்டில் தனது மனைவியை கடத்தியவர்களை எப்படி கண்டுபிடித்து மீட்கிறார் என கதை இருந்தது.
அதில் கடத்தல் கும்பலில் ஒருவராக ஆரவ் நடித்து இருந்தார். படத்தில் அவர் அஜித்தை மோசமாக பேசும் வகையில் வசனங்கள் இருந்தது. குறிப்பாக பூமர் என அஜித்தை அவர் சொன்னது வைரல் ஆனது.
ஆரவ் பேட்டி
இந்நிலையில் இன்று சேலத்தில் விடாமுயற்சி படம் ஓடும் தியேட்டர் ஒன்றிற்கு ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இருவரும் சென்று இருந்தனர்.
அங்கு செய்தியாளர்களை அவர்கள் சந்தித்து பேசினர். "படத்தில் அஜித்தை அடித்து நடித்திருக்கிறீர்கள், அதற்கு ரசிகிர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது" என செய்தியாளர் ஒருவர் கேட்க, "கதை அப்படி. அஜித் சார் ஆரம்பத்திலேயே அதை சொன்னார். என் ரசிகர்களுக்கு எது படம், எது real என புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார்."
"முதல் நாளில் நான் 10 - 12 தியேட்டர்களுக்கு சென்று அஜித் ரசிகர்கள் உடன் தான் படம் பார்த்தேன். அப்போது அவர்கள் எல்லோரும் என்னை பாராட்ட தான் செய்தார்கள்" என கூறி இருக்கிறார்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
