AK62 படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் ! விஜய்யை விட அதிகமா?

By Jeeva Jun 28, 2022 12:30 PM GMT
Report

அஜித்தின் சம்பளம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61 திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் ஷூட்டிங்கில் ப்ரேக் எடுத்துள்ள அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு தனது பைக் முலம் ரைட் செய்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் அப்பட ஷூட்டிங்கை முடித்த பின் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதற்கிடையே தற்போது அப்படத்தில் நடிகர் அஜித்தின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி அஜித் இப்படத்திற்காக ரூ.105 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும், அதில் 30 கோடி ரூபாய் ஏற்கனவெ அட்வான்ஸாக கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவி வருகிறது.

AK62 படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் ! விஜய்யை விட அதிகமா? | Ajith Salary For Ak62 Movie

திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் திரைப்படம் ! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US