குட் பேட் அக்லி படத்தில் மாஸ் செய்த அஜித் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி, தமிழக ரசிகர்களின் பேவரெட் படமாக இப்போது உள்ளது.
காரணம் நேற்று, ஏப்ரல் 10 செம மாஸாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வெளியானது.
கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாக ஏப்ரலில் அவரின் அடுத்த படமான குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்கள் கொண்டாடும் படி தரமான படத்தை கொடுத்துவிட்டார்.
சம்பளம்
முன்பதிவு, வியாபாரம் மூலமாகவே பல கோடி லாபம் பார்த்த இப்படம் ரிலீஸ் பிறகு நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கு மேலாகவும் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 65 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தில் தரமான சம்பவம் செய்துள்ள நடிகர் அஜித் இந்த படத்திற்காக ரூ. 163 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.