Good Ugly Bad படத்திற்காக அஜித் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

Yathrika
in திரைப்படம்Report this article
அஜித்
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. எச்.வினோத் இயக்கியிருந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன்பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் பல நாட்களாக அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு படக்குழுவுடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தன.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போது என சரியாக தெரியவில்லை. இதற்கு இடையில் அஜித்திற்கு சின்ன ஆபரேஷன் நடந்தது, நடிகர் ஓய்வில் இருப்பார் என்று பார்த்தால் மீண்டும் தனது குழுவுடன் பைக் டூர் கிளம்பியுள்ளார்.
சமீபத்திய பைக் டூரில் தனது குழுவினருக்கு சாப்பாடு சமைத்து கொடுத்துள்ளார், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சம்பள விவரம்
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு Good Ugly Bad என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்திற்கு நடிகர் அஜித் ரூ. 163 கோடி சம்பள பெற இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.