வில்லனாக கலக்கியிருக்கும் வாலி படத்திற்காக அஜித் அப்போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இரட்டை வேடங்கள் நடிப்பது என்பது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. ஆனால் அதில் வித்தியாசம் காட்டுகிறார்கள் என்றால் அப்படி ஒன்றும் இல்லை.
ஆனால் இந்த காலத்தில் இரட்டை வேடம் நடித்தவர்கள் எல்லாம் அசத்தியிருப்பார்கள். அப்படி வாலி படத்தில் ஹேன்சம் ஹீரோ கொடுமையான வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் அஜித்.
சிம்ரன், ஜோதிகா நாயகிகனாக நடிக்க தேவா இசையமைத்திருப்பார். படமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் பல விருதுகள் அஜித்துக்கு வழங்கப்பட்டது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைத்து படம் பார்த்த அஜித் அப்போதே எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
பெரிய அளவில் பேசப்பட்ட, ஹிட்டடித்த இந்த படத்திற்காக அஜித் 1999ல் வாங்கிய சம்பளம் ரூ. 20 லட்சமாம்.