ரசிகர்களுடன் மாஸாக செல்பி எடுத்த தல அஜித்.. இதுவரை நீங்கள் பார்த்தீராத புகைப்படம்
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாவதற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் தனது ரசிகர்களுடன் மாஸாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..