இந்த புகைப்படத்தில் இரண்டு டாப் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.. யார் என தெரிகிறதா?
வைரல் போட்டோ
நடிகர், நடிகைகளின் இளம் வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இரண்டு டாப் நட்சத்திரங்கள் ஒன்றாக நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அது வேறு யாருமில்லை நடிகர் அஜித் மற்றும் பாடகர் எஸ்.பி. சரண் தான். ஆம், இளம் வயதில் இருந்தே அஜித் மற்றும் எஸ்பி சரண் ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆவார்கள். இதை பல முறை எஸ்.பி. சரண் கூறியிருக்கிறார்.
அஜித்தின் திரைப்பயணத்தில் உதவிய பல நல்ல உள்ளங்களில் ஒருவர் எஸ்.பி. சரணின் தந்தையும், லெஜண்ட் பாடகர் எஸ்.பி.பி என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அஜித்தி அடுத்த் படம்
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். அடுத்த சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டும்தான் அவருடைய முழு எண்ணமும் இருக்கப்போகிறது. அதன்பின், ஆதிக் ரவிச்சந்திரனுடன் இரண்டாவது முறையாக அஜித் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கும் என அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.