முதுகுஎலும்பில் தல அஜித்துக்கு ஆப்ரேஷன் - ஆனாலும் அந்த விஷயத்தை செய்தார், ஷாக்கிங் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ரசிகர்களால் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுபவர் தல அஜித்.
இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய கடைசி 2 திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டானது.
இதனை தொடர்ந்து தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
மேலும் வரும் மே 1 இப்படத்தின் First லுக் வெளியாகவிருக்கிறது என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தல அஜித்திற்கு இதுவரை பல ஆப்ரேஷன்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் தல அஜித்திற்கு பல ஆண்டுககுக்கு முன் முதுகு எலும்பில் தீவிரமான ஆப்ரேஷன் நடந்துள்ளது.
ஆனால் அதனை துளி அளவுகூட பொருட்படுத்தாமல், தல அஜித் மிகப்பெரிய ஸ்டண்ட் காட்சி ஒன்றை நடித்துள்ளார் என ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.
இதனால் தான் அஜித் தற்போது இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri