வலிமை வில்லனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித்.. இன்ப அதிர்ச்சியில் நடிகர்
நடிகர் அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை.
இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழில் திரையுலகில் அறிமுகமாகிறார், நடிகர் கார்த்திகேயா.
இவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
நடிகர் கார்த்திகேயாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்ற முடிந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்த தனது காதலி, லோஹிதாவையே கரம்பிடித்தார்.
ஐதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்திற்கு நடிங்கர் அஜித் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், கார்த்திகேயாவை போனில் அழைத்து வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார் அஜித்.
மேலும் கூடியவிரைவில், புதுமண தம்பதியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்க இருக்கிறாராம் அஜித்.
இந்த செய்தி கார்த்திகேயாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.