மறைந்த தனது தந்தை குறித்து பேசிய நடிகர் அஜித்.. என்ன சொன்னார் என்று பாருங்க
அஜித்
இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து அங்குள்ள முன்னணி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அஜித் கொடுக்கும் பேட்டி இதுவாகும். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை அஜித் பகிர்ந்துகொண்டார். அதில் தனது மறைந்த தந்தை குறித்தும் அஜித் பேசியுள்ளார்.
தந்தை குறித்து பேசிய அஜித்
இதில் "மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்று என் தந்தை சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் உனக்கு நிதி உதவி செய்ய முடியாது. ஆனால், நான் உன்னை தடுக்க மாட்டேன் நீ மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேல எவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய் என எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் என்றார்" என பேசியுள்ளார்.