நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்.. வெளிப்படையாக கூறிய அஜித்
சூப்பர்ஸ்டார் சர்ச்சை
சமீபகாலமாக சூப்பர்ஸ்டார் ரஜினியா இல்லை விஜய்யா என்ற விவாதம் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் சென்று கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினிகாந்த் கூறிய கழுகு - காகம் கதை இந்த சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சைக்காக தான் கூறி இந்த ரசிகர்கள் சண்டை தீ பிடித்து எரிய துவங்கிவிட்டது.
அடுத்த சூப்பர்ஸ்டார் யார்
இந்நிலையில், தற்போது அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என பேச்சு போய்க்கொண்டு இருக்கும் நிலையில், தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலேயே நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அஜித் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் அஜித் நடிப்பில் வெளிவந்த உல்லாசம் பட நேரத்தில் நடந்துள்ளது. அப்போது ஒரு விழாவில் பேசிய அஜித் 'கண்டிப்பாக நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்' என கூறியிருக்கிறார்.
அஜித் பல ஆண்டுகளுக்கு முன் இப்படி பேசியதை தற்போது நடந்து வரும் சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சையில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் 57 வயது நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.. வில்லனாக களமிறங்கும் முன்னணி நட்சத்திரம்