விஜய் மகனுக்கு உதவ முன் வந்த அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா
சஞ்சய்
தமிழ் சினிமாவில் தற்போது என்ட்ரி கொடுத்துள்ள புதிய இளம் இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய். தளபதி விஜய்யின் மகனான இவர் நடிகராக இல்லாமல், இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
இவருடைய முதல் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து 2023ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்த நிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்கிற அறிவிப்பு வெளிவந்தது.
இந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபின் படப்பிடிப்பு துவங்காமல் இருந்த நிலையில், சஞ்சய் சற்று மனமுடைந்துபோய் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என, தனது நலம்விரும்பியான சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து கேட்டுள்ளார்.
அஜித்தின் மேலாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா என்பதை அனைவரும் அறிவோம். சஞ்சய் போன் கால் செய்தபோது, சுரேஷ் சந்திராவின் அருகில் அஜித்தும் இருந்தாராம். அப்போது 'யாருடன் பேசிக்கொண்டு இருக்குறீகள்' என அஜித் கேட்க, 'விஜய்யின் மகனிடம்' என அவர் கூறியுள்ளார்.
விஜய் மகனுடன் பேசிய அஜித்
பின் அந்த போனை வாங்கிய அஜித், சஞ்சய்யிடம் நலம் விசாரித்து, அவருடைய முதல் படத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அஜித், "இப்படத்தில் எதாவது பிரச்சனை என்றால் என்னிடம் தயங்காமல் கூறு, நான் உனக்கு வேறு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை கூறுகிறேன்" என அஜித் பேசினாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
