பல இடங்களில் அஜித்தின் துணிவு பட முதல் காட்சி ரத்து- புலம்பிய ரசிகர்கள், காரணம் என்ன?
துணிவு
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே முதலில் ரசிகர்களால் பார்க்கப்படுவது ஸ்பெஷல் ஷோ உள்ளதா என்று தான்.
அப்படி அஜித்தின் துணிவு படத்திற்கு அதிகாலை 1 மணி ஷோ ஏற்பாடு செய்ய ரசிகர்கள் தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருந்தார்கள்.
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, துணிவு திரைப்பபடத்தின் முதல்நாள் முதல் காட்சி முடிந்துவிட்டது, ரசிகர்கள் அனைவருமே படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.
பொதுவாக எந்த படமாக இருந்தாலும் இரண்டு விதமான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும், அப்படி தான் துணிவு படத்திற்கும் வந்துகொண்டிருக்கிறது.

காட்சிகள் ரத்து
தற்போது என்னவென்றால் அஜித்தின் துணிவு படத்திற்கான அதிகாலை 1 மணி காட்சிகள் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஏன் என்ற காரணமும் தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளது.
அப்படி எந்தெந்த இடங்கள் என்றால் திண்டுக்கல், தென்காசி போன்ற இடங்களில் தான் முதல் காட்சி ரத்தாகி இருக்கிறது.