அஜித்தின் துணிவு பட டிரைலர் எவ்வளவு மாஸாக இருக்கிறது தெரியுமா?- சூப்பர் டுவிட்
அஜித்தின் துணிவு
2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெற நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது.
இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

டிரைலர் அப்டேட்
அஜித்தின் துணிவு பட டிரைலருக்காக தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். டிரைலர் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் எப்படி உள்ளது என்ற விவரம் வந்துள்ளது.
அதாவது ஆஸ்கர் மல்டிப்ளக்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில், அஜித்தின் சிறந்த டிரைலராக இது இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு சூப்பரான டிரைலரை பார்க்க தயாராகுங்கள் என டுவிட் செய்துள்ளனர்.
இதைப்பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
#Thunivu trailer day - It will be your all time best trailer of #ThalaAjith for sure
— Aascar Multiplex (@Aascarmultiplex) December 30, 2022
Brace yourselves and witness the never seen before mass loaded trailer
Can't wait ! Fingers crossed
- AASCAR MULTIPLEX SALEM
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?