படம் பார்க்க கூட்டமே இல்லை, துணிவு பட ஷோவை கேன்சல் செய்த திரையரங்கம்- அஜித் படத்துக்கா இப்படி?
அஜித்தின் துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேற்று ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்துள்ள இப்படம் அதிக திரையரங்குகளை பெற்றிருந்தது.
பலர் அஜித்தின் துணிவு படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் போராடி வருகிறார்கள், அந்த அளவிற்கு படத்திற்கு ரசிகர்களிடம் சென்னையில் கிரேஸ் இருக்கிறுது.
தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ரத்தான ஷோ
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் அஜித்தின் துணிவு பட ஷோ ஆள் இல்லாமல் ரத்தான செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கரூரை அடுத்த அரவக்குறிச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தது, ஆனால் அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணி காட்சிக்கு மொத்தம் 17 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இதனால் அந்த திரையரங்க நிர்வாகம் அந்த காட்சியை ரத்து செய்துள்ளனர்.