பிரம்மாண்ட நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்.. இயக்குனர் யார் தெரியுமா
சமீபத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்த ஜெயிலர் படத்தை தயாரித்த நிறுவனம் சன் பிச்சர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன் பிச்சர்ஸ் - அஜித்
ஆனால், இதுவரை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிக்காமல் இருந்த நடிகர் அஜித். விரைவில் அவருடனும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் கைகோர்க்க உள்ளது. விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடிக்கவுள்ள படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளார்களாம்.

இதற்கான பேச்சு வார்த்தை கூட நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை இயக்கப்போவது யார் என கேள்வி எழுந்தது. முதலில் சிறுத்தை சிவா என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் இப்படத்தை இயக்கப்போவதில்லை என தெரியவந்துள்ளது.
இவர்கள் தான் இயக்குனர்களா
அட்லீ அல்லது நெல்சன் திலீப்குமார் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இப்படத்தை இயக்கப்போகிறார்கள் என தெரிவிக்கின்றனர். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சனுடன் சன் பிச்சர்ஸ் கைகோர்த்துள்ளது.

ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு வேலை இப்படத்திற்காக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவருகிறதா என்று.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri