அடுத்த படம் எப்போது.. 6 தரமான படங்கள்! அஜித் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் அஜித்துக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கடந்த மாதம் ரிலீஸ் ஆன குட் பேட் அக்லீ படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
அஜித் தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருவதால் அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. அது பற்றி சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நவம்பரில் அடுத்த படம்
நான் அடுத்த படத்தில் வரும் நவம்பரில் இருந்து நடிக்க தொடங்குகிறேன். அது அடுத்த வருடம் summerல் ரிலீஸ் ஆகும்.
ஒரே நேரத்தில் ரேஸிங் மற்றும் படங்களில் நடித்தால் இரண்டுக்குமே justice என்னால் செய்ய முடியாது என உணர்ந்தேன்.அதனால் ரேஸிங் சீசனில் நடிக்காமல் இருப்பது தான் concentrate செய்ய சிறந்த வழி என நான் நினைக்கிறேன்.
என்னை போலவே நினைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கிடைத்து இருப்பதால் அடுத்த ஆறு வருடங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் சிறந்த தரமான படங்களை பார்க்க போகிறீர்கள். இவ்வாறு அஜித் கூறி இருக்கிறார்.