வேதாளம் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.
வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். துணிவு படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாகும் வேதாளம். ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
அன்ஸீன் வீடியோ
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் கிரிக்கெட் விளையாடும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Ajithkumar|#ThunivuPongal|#NoGutsNoGlory
— @SelvaPandiyan........ (@Selva59350611) December 1, 2022
Thala Morning Vibes 💥💥💥 pic.twitter.com/rCLF1koIk3
Also Read This : டிஎஸ்பி திரைவிமர்சனம்