விஜய்யின் சர்க்காரை முந்திய அஜித்தின் வலிமை.. முதல் நாள் வசூல் சாதனை
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வலிமை.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்தனை ஆண்டு காத்திருந்த அஜித்தை படத்தை பார்த்ததற்கு, சிறந்த படமாக அமைத்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வலிமை திரைப்படம் ரூ. 33.5 கோடி வசூல் செய்துள்ளது என பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கும் முன் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் ரூ. 32 கோடி வசூல் செய்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், ரூ. 33.5 கோடியை ஒரே நாளில் வசூல் செய்து சர்கார் படத்தின் சாதனையை அஜித்தின் வலிமை முறியடித்துள்ளத.
தமிழகத்தில் அதிக திரையரங்கில் வெளிவந்த முதல் தமிழ் படமும், அதிக முன்பதிவு ஆன படமும் வலிமை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளை வெளிவரவிருக்கும் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
