வலிமை படத்தின் முதல்பார்வை கூட வெளியாகாத நிலையில், இணையத்தில் ட்ரெண்டான தல 61 !
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
கடைசியாக தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து ஒரு வருடமாக இவரின் திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.
இதனிடையே வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அப்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் தல அஜித்தின் ரசிகர்கள் தல 61 படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆம், தல அஜித் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முதல் தொடங்கும் என அதில் கூறிவருகின்றனர்.
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri