ஓடிடியில் நடிகர் அஜித்தின் வலிமை படம் - ரசிகர்களுக்கு ஷாக்
தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தரமான மாஸ் பி.ஜி.எம்களுடன் பாடல்களும் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
95 சதவீதம் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்த வருடத்தின் இறுதிகுள், இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர, பலரும் இதனை மறுத்து வருகின்றனர்.
எனினும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஆனால், இதை ஓடிடி டிவிட்டர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் சந்தோஷம் அடைத்துள்ளனர்.