ஹிட்டலரும், அஜித்தின் வலிமையும் - வெளிவந்த உண்மை

valimai hitler ajith kumar satans slave
By Kathick Sep 25, 2021 02:30 PM GMT
Report

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தின் Glimpse சமீபத்தில் வெளியானது. Youtube-ல் தற்போது வரை டிரெண்டிங்கிழும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த Glimpse வீடியோவின் துவக்கத்தில், வில்லனின் குரலில் ஒரு வசனம் வரும்.

அது என்னவென்றால், " நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் வலை தான் எங்கள் உலகு, அதில் அத்துமீறி யாரவது கால் வைத்தால் " எனும் வசனம் வரும்.

இதில் சாதத்தின் அடிமைகள் நாங்கள் என்ற வசனம் " சாத்தான் ஸ்லேவ் ரைடர்ஸ் " பற்றி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, ஸ்காட் லாண்ட், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இயங்கி வரும் பைக் ரிடர்களை பின்புலமாக கொண்ட திரைப்படம் தான் வலிமை என்று கூறுகின்றனர்.

ஹிட்டலரும், அஜித்தின் வலிமையும் - வெளிவந்த உண்மை | Ajith Valimai Story Based On This One

இந்த சாத்தான் பைக் ரைடர்ஸ், வெறும் ஊரை சுற்றி பார்க்க மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு செல்கிறவர்கள் அல்ல. இவர்கள் ஹிட்லரின் அடிபொடிகளாக பார்க்கப்பட்ட, பல கொலை சம்பவங்களை காவல் துறையால் தேடப்பட்டு வரும் கேங் தான், சாத்தான் பைக் ரைடர்ஸ். துவக்கத்தில் ஒரே ஒரு கேங் உருவான நிலையில், காலப்போக்கில் அதே பெயரை பல கேங்கள் உருவானது.

முக்கியமாக இங்கிலாந், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தான் இவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சில குழுக்கள் பைக் ரைடர்ஸாக இருந்தாலுமே, பல குழுக்கள் கொலை, கொள்ளை போன்ற தவறான விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிட்டலரும், அஜித்தின் வலிமையும் - வெளிவந்த உண்மை | Ajith Valimai Story Based On This One

இந்த சாத்தான் பைக் ரைடர்ஸ் குழுவில் தற்போது வரை பலரும், ஹிட்லரின் கருத்தை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை 'Nazi-கள்' என்று அழைப்பார்களாம். ஜார்ஜ் ரிச்சி போன்ற சாத்தான் பைக் ரைடர்ஸ் குழு தலைவர்களை பல வருடங்களாக காவல் துறையினர்கள் தேடி வருகிறார்களாம். அதில் பலரையும் கைதும் செய்துள்ளார்களாம்.

இதில் ஒரு கேங்கை மையமாக கொண்டு தான் தல அஜித்தின் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டார்க் வெப், பைக் ரைடர்ஸ்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, கண்டிப்பாக வலிமை படம் செம த்ரில்லிங் ஆக தான் இருக்கும் என்று தெரிகிறது.  

ஹிட்டலரும், அஜித்தின் வலிமையும் - வெளிவந்த உண்மை | Ajith Valimai Story Based On This One

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US